Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

புதிய செய்திகள்:

திருவாரூர் மாவட்டம் உள்ளாட்சி தேர்தலில் 1976 வாக்குச்சாவடி மையங்கள்; கலெக்டர் தகவல்


தமிழகத்தில் 17.10.2011, 19.10.2011 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு திருவாரூர் மாவட்டத்தில் நகர்புற பகுதிகளுக்கு 247 வாக்குச்சாவடி மையங்களும், ஊரக பகுதிகளுக்கு 1729 மையங்களும் என மொத்தம் 1976 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஊரக பகுதிகளான திருவாரூர் ஒன்றியத்தில் 136 வாக்குச்சாவடி மையங்களும், நன்னிலம் ஒன்றியத்தில் 184 வாக்குச்சாவடி மையங்களும், குடவாசல் ஒன்றியத்தில் 191 வாக்குச்சாவடி மையங்க ளும், கொரடாச்சேரி ஒன்றியத்தில் 175 வாக்குச்சாவடி மையங்களும், வலங்கைமான் ஒன்றி யத்தில் 179 வாக்குச்சாவடி மையங்களும், மன்னார்குடி ஒன்றியத்தில் 210 வாக்குச்சாவடி மையங்களும் நீடாமங்கலம் ஒன்றியத்தில் 188 வாக் குச்சாவடி மையங்களும், கோட்டூர் ஒன்றியத்தில் 201 வாக்குச்சாவடி மையங்களும், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 142 வாக்குச் சாவடி மையங்களும், முத்துப் பேட்டை ஒன்றியத்தில் 123 வாக்குச்சாவடி மையங்களும், என 1729 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவைகளில் 275 வாக்குச்சாவடி மையங்களும், மையங்கள் 1 வார்டு வாக்குச் சாவடி மையங்களாகவும், 1454 வாக்குச்சாவடி மையங் கள் 2 வார்டு வாக்குச்சாவடி மையங்களாகவும் செயல் படும். நகர்புற பகுதிகளாக திருவாரூர் நகராட்சி மொத் தம் உள்ள 30 வார்டுகளுக்கு அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடி மையங்களாக 17 மையங்களும், 13 ஆண் வாக்குச்சாவடி மையங்களும், 13 பெண் வாக்குச்சாவடி மையங்களும் என 43 மையங்களும்.
மன்னார்குடி நகராட்சி மொத்தம் உள்ள 33 வார்டுகளுக்கு அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடி மையங்களாக 19 மையங்களும், 16 ஆண் வாக்குச்சாவடி மையங்களும், 16 பெண் வாக்குச்சாவடி மையங்களும், என 51 மையங்களும், கூத்தாநல்லூர் நகராட்சி மொத்தம் உள்ள 24 வார்டுகளுக்கு அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடி மையங்களாக 24 மையங்களும்,
திருத்துறைப்பூண்டி நகராட்சி மொத்தம் உள்ள 14 வார்டுகளுக்கு அனைத்து வாக்காளர் வாக்குச் சாவடி மையங்களாக 24 மையங்களும், என மொத்தம் 111 வார்டுகளுக்கு 142 வாக்குச் சாவடி மையங்களும். பேரூராட்சி பகுதிகளான நன்னிலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு அனைத்து வாக்குச்சாவடி மையங்களாக 15 மையங்களும், குடவாசல் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளுக்கு அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடி மையங் களாக 12 மையங்களும், கொரடாச்சேரி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடி மையங்களாக 15 மையங்களும்,
பேரளம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடி மையங்களாக 15 மையங்களும், நீடாமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடி மையங்களாக 15 மையங்க ளும், வலங்கைமான் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு அனைத்து வாக்காளர் வாக் குச் சாவடி மையங்களாக 15 மையங்களும், முத்துப் பேட்டை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டு களுக்கு அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடி மையங்களாக 18 மையங்களும், என மொத்தம் 105 வார்டுகளுக்கு 105 வாக்குச்சாவடி மையங்களும் என மாவட்டம் முழுவதும் 1976 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மின்வசதி, கழிவறை வசதி, சாய்புப்பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்த தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட கலெக்டர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.