Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

புதிய செய்திகள்:

பொதக்குடி மருத்துவமனை வளாகத்தை உடனடியாக திறக்க வேண்டும்: மக்கள் மன்றம் கோரிக்கை!

திருவாரூர் மாவட்டம் பொதக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று பொதக்குடி மக்கள் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
பொதக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், வெறும் 2 டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் மேற்படி மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவர்கள் தங்கி இருந்து 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க வசதியாக, பொதக்குடி பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சேர்ந்து மருத்துவ வளாகம் கட்டியுள்ளனர்.
ஆனால், மருத்துவ வளாகம் கட்டப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் அக்கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே, மேற்படி மருத்துவமனை வளாகத்தை திறக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

24 மணி நேரமும் பொதக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்களின் தேவைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட முதல் - அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பொதக்குடி மக்கள் மன்ற அமைப்பாளர் வி.கே.எஸ்.செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏ.கே.சாதிக் பாட்சா எச்.சாகுல் ஹமீது, வி.எஸ்.ஏ.அப்துல்லத்தீப், ஏ.ஜெ.ஹாஜாபகுருதீன், ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.