Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

புதிய செய்திகள்:

பலத்த மழை எதிரொலி: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் குடவாசலில் அதிகபட்சமாக 99 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதாக கலெக்டர் நடராசன் தெரிவித்துள்ளார்.